Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குறுந்தொகை (பகுதி-4) குறுந்தொகை (பகுதி-6)
முதல் பக்கம் » குறுந்தொகை
குறுந்தொகை (பகுதி-5)
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2013
01:03

குறுந்தொகை - 201. குறிஞ்சி - தலைவி கூற்று

அமிழ்த முண்கநம் அயலி லாட்டி
பால்கலப் பன்ன தேக்கொக் கருந்துபு
நீல மென்சிறை வள்ளுகிர்ப் பறவை
நெல்லி யம்புளி மாந்தி யயலது
முள்ளி லம்பணை மூங்கிற் றூங்கும்  5
கழைநிவந் தோங்கிய சோலை
மலைகெழு நாடனை வருமென் றாளே.  

குறுந்தொகை - 202. மருதம் - தலைவி கூற்று

நோமென் னெஞ்சே நோமென் னெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்
இன்னா செய்தல் நோமென் னெஞ்சே.  5
- அள்ளூர் நன்முல்லையார்.  

குறுந்தொகை - 203. மருதம் - தலைவி கூற்று

மலையிடை யிட்ட நாட்டரு மல்லர்
மரந்தலை தோன்றா ஊரரு மல்லர்
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇ ஒழுகும் என்னைக்குப்  5
பரியலென் மன்யான் பண்டொரு காலே.  
- நெடும் பல்லியத்தனார்.

குறுந்தொகை - 204. குறிஞ்சி - பாங்கன் கூற்று

காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே.  5
- மிளைப்பெருங் கந்தனார்.  

குறுந்தொகை - 205. நெய்தல் - தலைவி கூற்று

மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப்
பொலம்படைப் பொலிந்த வெண்டேர் ஏறிக்
கலங்குகடல் துவலை ஆழி நனைப்ப
இனிச்சென் றனனே இடுமணற் சேர்ப்பன்  5
யாங்கறிந் தன்றுகொல் தோழியென்
தேங்கமழ் திருநுதல் ஊர்தரும் பசப்பே.  
- உலோச்சனார்.  

குறுந்தொகை - 206. குறிஞ்சி - தலைவன் கூற்று

அமிழ்தத் தன்ன அந்தீங் கிளவி
அன்ன இனியோள் குணனும் இன்ன
இன்னா அரும்படர் செய்யு மாயின்
உடனுறை வரிதே காமம்
குறுக லோம்புமின் அறிவுடை யீரே.  5
- ஐயூர் முடவனார்.  
 
குறுந்தொகை - 207. பாலை - தலைவி கூற்று

செப்பினஞ் செலினே செலவரி தாகுமென்
றத்த வோமை அங்கவட் டிருந்த
இனந்தீர் பருந்தின் புலம்புகொள் தெள்விளி
சுரஞ்செல் மாக்கட் குயவுத்துணை யாகும்
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி  5
நல்லடி பொறிப்பத் தாஅய்ச்
சென்றெனக் கேட்டனம் ஆர்வலர் பலரே.  
- உறையனார்.  

குறுந்தொகை - 208. குறிஞ்சி - தலைவி கூற்று

ஒன்றே னல்லேன் ஒன்றுவென் குன்றத்துப்
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார்
நின்றுகொய மலரும் நாடனொ
டொன்றேன் றோழி ஒன்றினானே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 209. பாலை - தலைவன் கூற்று

அறந்தலைப் பட்ட நெல்லியம் பசுங்காய்
மறப்புலிக் குருளை கோளிடங் கறங்கும்
இறப்பருங் குன்ற மிறந்த யாமே
குறுநடை பலவுள் ளலமே நெறிமுதற்
கடற்றிற் கலித்த முடச்சினை வெட்சி  5
தளையவிழ் பல்போது கமழும்
மையிருங் கூந்தன் மடந்தை நட்பே.  
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.  

குறுந்தொகை - 210. முல்லை - தோழி கூற்று

திண்டேர் நள்ளி கானத் தண்டர்
பல்லாப் பயந்த நெய்யிற் றொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி
பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு  5
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.  
- காக்கை பாடினியார் நச்செள்ளையார்.  

குறுந்தொகை - 211. பாலை - தோழி கூற்று

அஞ்சி லோதி யாய்வளை நெகிழ
நேர்ந்துநம் அருளார் நீத்தோர்க் கஞ்சல்
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத்
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை
வேனி லோரிணர் தேனோ டூதி  5
ஆராது பெயருந் தும்பி
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே.  
- காவன்முல்லைப் பூதனார்.

குறுந்தொகை - 212. நெய்தல் - தோழி கூற்று

கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்
அளிதோ தானே காமம்
விளிவது மன்ற நோகோ யானே.  5
- நெய்தற் கார்க்கியன்.  
 
குறுந்தொகை - 213. பாலை - தோழி கூற்று

நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக்
கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்
பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல்
ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்
றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி  5
நின்றுவெயில் கழிக்கு மென்பநம்
இன்றுயில் முனிநர் சென்ற வாறே.  
- கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.

குறுந்தொகை - 214. குறிஞ்சி - தோழி கூற்று

மரங்கொல் கானவன் புனந்துளர்ந்து வித்திய
பிறங்குகுரல் இறடி காக்கும் புறந்தாழ்
அஞ்சி லோதி அசையியற் கொடிச்சி
திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய அயல  5
தரலை மாலை சூட்டி
ஏமுற் றன்றிவ் வழுங்க லூரே.  
- கூடலூர்கிழார்.  

குறுந்தொகை - 215. பாலை - தோழி கூற்று

படரும் பைப்பயப் பெயருஞ் சுடரும்
என்றூழ் மாமலை மறையும் இன்றவர்
வருவர்கொல் வாழி தோழி நீரில்
வறுங்கயந் துழைஇய விலங்குமருப் பியானை
குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக்  5
கொடுவரி இரும்புலி காக்கும்
நெடுவரை மருங்கிற் சுரனிறந் தோரே.  
- மதுரை அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார்.  

குறுந்தொகை - 216. பாலை - தலைவி கூற்று

அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை
வாடா வள்ளியங் காடிறந் தோரே
யானே, தோடார் எல்வளை ஞெகிழ ஏங்கிப்
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே
அன்னள் அளியள் என்னாது மாமழை  5
இன்னும் பெய்ய முழங்கி
மின்னுந் தோழியென் இன்னுயிர் குறித்தே.  
- கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்.  

குறுந்தொகை - 217. குறிஞ்சி - தோழி கூற்று

தினைகிளி கடிகெனிற் பகலும் ஒல்லும்
இரவுநீ வருதலி னூறு மஞ்சுவல்
யாங்குச் செய்வாமெம் இடும்பை நோய்க்கென
ஆங்கியான் கூறிய அனைத்திற்குப் பிறிதுசெத்
தோங்குமலை நாடன் உயிர்த்தோன் மன்ற  5
ஐதே காமம் யானே
கழிமுதுக் குறைமையும் பழியுமென் றிசினே.  
- தங்கால் முடக்கொல்லனார்.  

குறுந்தொகை - 218. பாலை - தலைவி கூற்று

விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக்
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம்
புள்ளும் ஓராம் விரிச்சியு நில்லாம்
உள்ளலு முள்ளா மன்றே தோழி
உயிர்க்குயிர் அன்ன ராகலிற் றம்மின்  5
றிமைப்புவரை யமையா நம்வயின்
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே.  
- கொற்றனார்.  
 
குறுந்தொகை - 219. நெய்தல் - தலைவி கூற்று

பயப்பென் மேனி யதுவே நயப்பவர்
நாரில் நெஞ்சத் தாரிடை யதுவே
செறிவுஞ் சேணிகந் தன்றே யறிவே
ஆங்கட் செல்கம் எழுகென வீங்கே
வல்லா கூறியிருக்கு முள்ளிலைத்  5
தடவுநிலைத் தாழைச் சேர்ப்பர்க்
கிடமற் றோழியெந் நீரிரோ வெனினே.  
- வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார்.

குறுந்தொகை - 220. முல்லை - தலைவி கூற்று

பழமழைக் கலித்த புதுப்புன வரகின்
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணி
குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின்  5
வண்டுசூழ் மாலையும் வாரார்
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே.  
- ஒக்கூர் மாசாத்தியார்.   

குறுந்தொகை - 221. முல்லை - தலைவி கூற்று

அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே.  5
- உறையூர் முதுகொற்றனார்.  

குறுந்தொகை - 222. குறிஞ்சி - தலைவன் கூற்று

தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள் போலு மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்  5
செவ்வெரி நுறழும் கொழுங்கடை மழைக்கட்
டுளிதலைத் தலைஇய தளிரன் னோளே.  
- சிறைக்குடி யாந்தையார்.

குறுந்தொகை - 223. குறிஞ்சி - தலைவி கூற்று

பேரூர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம் என்றி அன்றிவண்
நல்லோர் நல்ல பலவாற் றில்ல
தழலும் தட்டையும் முறியுந் தந்திவை
ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி  5
அன்னை யோம்பிய ஆய்நலம்
என்னை கொண்டான்யாம் இன்னமா லினியே.  
- மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார்.   

குறுந்தொகை - 224. பாலை - தலைவி கூற்று

கவலை யாத்த அவல நீளிடைச்
சென்றோர் கொடுமை யெற்றித் துஞ்சா
நோயினு நோயா கின்றே கூவற்
குராலான் படுதுயர் இராவிற் கண்ட
உயர்திணை ஊமன் போலத்  5
துயர்பொறுக் கல்லேன் தோழி நோய்க்கே.  
- கூவன் மைந்தனார்.  

குறுந்தொகை - 225. குறிஞ்சி - தோழி கூற்று

கன்றுதன் பயமுலை மாந்த முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்டிடத் துவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றிமறந் தமையா யாயின் மென்சீர்க்  5
கலிமயிற் கலாவத் தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவா நினக்கே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 226. நெய்தல் - தலைவி கூற்று

பூவொடு புரையுங் கண்ணும் வேயென
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென
மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
நல்லமன் வாழி தோழி அல்கலும்
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்  5
குருகென மலரும் பெருந்துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே.  
- மதுரை எழுத்தாளனார் சேந்தம்பூதனார்.  

குறுந்தொகை - 227. நெய்தல் - தோழி கூற்று

பூண்வனைந் தன்ன பொலஞ்சூட்டு நேமி
வாண்முகந் துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை நெய்தலு முடைத்திவண்
தேரோன் போகிய கான லானே.  
- ஓதஞானியார்.  

குறுந்தொகை - 228. நெய்தல் - தலைவி கூற்று

வீழ்தாழ் தாழை யூழுறு கொழுமுகை
குருகுளர் இறகின் விரிபுதோ டவிழும்
கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரைவந்து பெயரும் என்பநத் துறந்து
நெடுஞ்சே ணாட்டார் ஆயினும்
   5
நெஞ்சிற் கணியர் தண்கட னாட்டே.  
- செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார்.

குறுந்தொகை - 229. பாலை - கண்டோர் கூற்று

இவனிவ ளைம்பால் பற்றவும் இவளிவன்
புன்றலை யோரி வாங்குநள் பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவுந் தவிரா
தேதில் சிறுசெரு வுறுப மன்னோ
நல்லைமன் றம்ம பாலே மெல்லியல்  5
துணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகிழ் இயற்கை காட்டி யோயே.  
- மோதாசானார்.  

குறுந்தொகை - 230. நெய்தல் - தோழி கூற்று

அம்ம வாழி தோழி கொண்கன்
தானது துணிகுவ னல்லன் யானென்
பேதை மையாற் பெருந்தகை கெழுமி
நோதகச் செய்ததொன் றுடையேன் கொல்லோ
வயச்சுறா வழங்குநீர் அத்தம்  5
சின்னாள் அன்ன வரவறி யானே.  
- அறிவுடை நம்பியார்.  

குறுந்தொகை - 231. மருதம் - தலைவி கூற்று

ஓரூர் வாழினும் சேரி வாரார்
சேரி வரினும் ஆர முயங்கார்
ஏதி லாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே நாணட்டு
நல்லறி விழுந்த காமம்  5
வில்லுமிழ் கணியிற் சென்றுசேட் படவே.  
- பாலைபாடிய பெருங்கடுங்கோ.  

குறுந்தொகை - 232. பாலை - தோழி கூற்று

உள்ளார் கொல்லோ தோழி உள்ளியும்
வாய்ப்புணர் வின்மையின் வாரார் கொல்லோ
மரற்புகா வருந்திய மாவெருத் திரலை
உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய
யாஅ வரிநிழல் துஞ்சும்  5
மாயிருஞ் சோலை மலையிறந் தோரே.  
- ஊண் பித்தையார்.

குறுந்தொகை - 233. முல்லை - தலைவன் கூற்று

கவலை கெண்டிய அகல்வாய்ச் சிறுகுழி
கொன்றை யொள்வீ தாஅய்ச் செல்வர்
பொன்பெய் பேழை மூய்திறந் தன்ன
காரெதிர் புறவி னதுவே உயர்ந்தோர்க்கு
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும்  5
வரைகோ ளறியாச் சொன்றி
நிரைகோற் குறுந்தொடி தந்தை யூரே!  
- பேயனார்.

குறுந்தொகை - 234. முல்லை - தலைவி கூற்று

சுடர்செல் வானஞ் சேப்பப் படர்கூர்ந்
தெல்லறு பொழுதின் முல்லை மலரும்
மாலை என்மனார் மயங்கி யோரே
குடுமிக் கோழி நெடுநக ரியம்பும்
பெரும்புலர் விடியலு மாலை  5
பகலும் மாலை துணையி லோர்க்கே.  
- மிளைப்பெருங் கந்தனார்.  
  
குறுந்தொகை - 235. பாலை - தலைவன் கூற்று

ஓம்புமதி வாழியோ வாடை பாம்பின்
தூங்குதோல் கடுக்குந் தூவெள் ளருவிக்
கல்லுயர் நண்ணி யதுவே நெல்லி
மரையின மாரு முன்றிற்
புல்வேய் குரம்பை நல்லோ ளூரே.  5
- மரயேண்டனார்.  

குறுந்தொகை - 236. நெய்தல் - தோழி கூற்று

விட்டென விடுக்குநாள் வருக அதுநீ
நேர்ந்தனை யாயின் தந்தனை சென்மோ
குன்றத் தன்ன குவவுமணல் அடைகரை
நின்ற புன்னை நிலந்தோய் படுசினை
வம்ப நாரை சேக்கும்  5
தண்கடற் சேர்ப்பநீ உண்டவென் னலனே.  
- நரிவெரூஉத் தலையார்.  
 
குறுந்தொகை - 237. பாலை - தலைவன் கூற்று

அஞ்சுவ தறியா தமர்துணை தழீஇய
நெஞ்சுதப் பிரிந்தன் றாயினும் எஞ்சிய
கைபிணி நெகிழின்அ தெவனோ நன்றும்
சேய வம்ம இருவா மிடையே
மாக்கடல் திரையின் முழங்கி வலனேர்பு  5
கோட்புலி வழங்குஞ் சோலை
எனைத்தென் றெண்ணுகோ முயக்கிடை மலைவே.  
- அள்ளூர் நன்முல்லையார்.  

குறுந்தொகை - 238. மருதம் - தோழி கூற்று

பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே.  5
- குன்றியனார்.  

குறுந்தொகை - 239. குறிஞ்சி - தலைவி கூற்று

தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே
விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச்
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியின் தோன்றும்  5
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே.  
- ஆசிரியர் பெருங்கண்ணனார்.  

குறுந்தொகை - 240. முல்லை - தலைவி கூற்று

பனிப்புத லிவர்ந்த பைங்கொடி யவரைக்
கிளிவா யொப்பின் ஒளிவிடு பன்மலர்
வெருக்குப்பல் லுருவின் முல்லையொடு கஞலி
வாடை வந்ததன் றலையும் நோய்பொரக்
கண்டிசின் வாழி தோழி தெண்டிரைக்  5
கடலாழ் கலத்திற் றோன்றி
மாலை, மறையு மவர் மணிநெடுங் குன்றே.  
- கொல்லனழிசியார்.

குறுந்தொகை - 241. குறிஞ்சி - தலைவி கூற்று

யாமெங் காமந் தாங்கவும் தாந்தம்
கெழுதகை மையி னழுதன தோழி
கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர்பத நோக்கி
ஏறா திட்ட ஏமப் பூசல்  5
விண்டோய் விடரகத் தியம்பும்
குன்ற நாடற் கண்டவெங் கண்ணே.  
- கபிலர்.   

குறுந்தொகை - 242. முல்லை - செவிலித்தாய் கூற்று

கானங் கோழி கவர்குரற் சேவல்
ஒண்பொறி எருத்தின் தண்சிதர் உறைப்பப்
புதனீர் வாரும் பூநாறு புறவிற்
சீறூ ரோளே மடந்தை வேறூர்
வேந்துவிடு தொழிலொடு செலினும்  5
சேந்துவரல் அறியாது செம்மல் தேரே.  
- குழற்றத்தனார்.  

குறுந்தொகை - 243. நெய்தல் - தலைவி கூற்று

மானடி யன்ன கவட்டிலை அடும்பின்
தார்மணி யன்ன ஒண்பூக் கொழுதி
ஒண்தொடி மகளிர் வண்ட லயரும்
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை
உள்ளேன் தோழி படீஇயர்என் கண்ணே.  5
- நம்பி குட்டுவனார்.  

குறுந்தொகை - 244. குறிஞ்சி - தோழி கூற்று

பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவு முயறல்
கேளே மல்லேங் கேட்டனெம் பெரும
ஓரி முருங்கப் பீலி சாய
நன்மயில் வலைப்பட் டாங்கியாம்  5
உயங்குதொறு முயங்கும் அறனில் யாயே.  
- கண்ணனார்.  

குறுந்தொகை - 245. நெய்தல் - தலைவி கூற்று

கடலங் கான லாய மாய்ந்தவென்
நலமிழந் ததனினு நனியின் னாதே
வாள்போல் வாய கொழுமடல் தாழை
மாலைவேல் நாட்டு வேலி யாகும்
மெல்லம் புலம்பன் கொடுமை  5
பல்லோர் அறியப் பரந்துவெளிப் படினே.  
- மாலைமாறனார்.  

குறுந்தொகை - 246. நெய்தல் - தலைவி கூற்று

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
களிற்றுச்செவி யன்ன பாசடை மயக்கிப்
பனிக்கழி துழவும் பானாள் தனித்தோர்
தேர்வந்து பெயர்ந்த தென்ப வதற்கொண்
டோரு மலைக்கு மன்னை பிறரும்  5
பின்னுவிடு கதுப்பின் மின்னிழை மகளிர்
இளையரு மடவரும் உளரே
அலையாத் தாயரொடு நற்பா லோரே.  
- கபிலர்.  

குறுந்தொகை - 247. குறிஞ்சி - தோழி கூற்று

எழின்மிக வுடைய தீங்கணிப் படூஉம்
திறவோர் செய்வினை அறவ தாகும்
கிளையுடை மாந்தர்க்குப் புணையுமா மிவ்வென
ஆங்கறிந் திசினே தோழி வேங்கை
வீயா மென்சினை வீயுக யானை  5
ஆர்துயில் இயம்பு நாடன்
மார்புரித் தாகிய மறுவில் நட்பே.  
-சேந்தம் பூதனார்.  

குறுந்தொகை - 248. நெய்தல் - தோழி கூற்று

அதுவர லன்மையோ அரிதே அவன்மார்
புறுக வென்ற நாளே குறுகி
ஈங்கா கின்றே தோழி கானல்
ஆடரை புதையக் கோடை யிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக்  5
குறிய வாகுந் துறைவனைப்
பெரிய கூறி யாயறிந் தனளே.  
- உலோச்சனார்.  
 
குறுந்தொகை - 249. குறிஞ்சி - தலைவி கூற்று

இனமயில் அகவு மரம்பயில் கானத்து
நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்பப்
படுமழை பொழிந்த சாரலவர் நாட்டுக்
குன்ற நோக்கினென் தோழி
பண்டை யற்றோ கண்டிசின் நுதலே.  5
- கபிலர்.  

குறுந்தொகை - 250. பாலை - தலைவன் கூற்று

பரலவல் படுநீர் மாந்தித் துணையோ
டிரலை நன்மா னெறிமுத லுகளும்
மாலை வாரா வளவைக் காலியற்
கடுமாக் கடவுமதி பாக நெடுநீர்ப்
பொருகயன் முரணிய உண்கண்  5
தெரிதீங் கிளவி தெருமர லுயவே.  
- நாமலார் மகனார் இளங்கண்ணனார்.

 
மேலும் குறுந்தொகை »
temple news
குறைந்த அடிகளையுடைய பாட்டால் தொகுக்கப்பெற்ற நூல் ஆதலால் குறுந்தொகை எனப்பட்டது. இந்நூல் 400 பாடல்களைக் ... மேலும்
 
குறுந்தொகை - கடவுள் வாழ்த்து தாமரை புரையுங் காமர் சேவடிப்பவழத் தன்ன மேனித் திகழொளிக்குன்றி ... மேலும்
 
குறுந்தொகை - 51. நெய்தல் - தோழி கூற்று கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்நூலறு முத்திற் காலொடு ... மேலும்
 
குறுந்தொகை - 101. குறிஞ்சி - தலைவன் கூற்று விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்அரிதுபெறு சிறப்பிற் ... மேலும்
 
குறுந்தொகை - 151. பாலை - தலைவன் கூற்று வங்காக் கடந்த செங்காற் பேடைஎழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar