திருபுவனை: மதகடிப்பட்டு அங்காள பரமேஸ்வரி கோயில் தேர் திருவிழா 14ம் தேதி அய்யனார் கோவிலில் ஊரணிப் பொங்கல், கொடி யேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதகடிப்பட்டு மயானத்தில் மயானக் கொள்ளை விழா நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து அப்பகுதிமக்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். மதியம் 12.30 மணிக்கு அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாலை 4 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. மதகடிப்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் செடல் போட்டு அம்மனுக்கு நேர்த்தி கடன் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், உற்சவதாரர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.