சாத்தூர்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில், நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்திபூஜாரி தலைமை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, கோயில் செயல்அலுவலர் தனபாலன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடந்தன. போலீஸ் பாதுகாப்புடன் காலை 8மணிமுதல் இரவு 7 மணிவரை எண்ணும் பணி நடந்தது. 15லட்சத்து 54ஆயிரத்து 366 ரூபாய்,99 கிராம் தங்கம், 359 கிராம்வெள்ளி, பக்தர்கள் காணிக்கையாக கிடைத்தது.