பதிவு செய்த நாள்
03
ஏப்
2013
10:04
உத்தமபாளையம்: மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும்,ஆயிரம் பேர் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் உத்தமபாளையத்தில் நடந்தது. உத்தமபாளையம் கோம்பை ரோட்டில் உஜ்ஜயினி மகா காளியம்மன் கோயில் உள்ளது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு,பவுர்ணமி நாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அன்னதானம் வழங்கியும், சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தும் அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து, நேற்று முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் நடந்த இம்முற்றோதலில் உத்தமபாளையம், சின்னமனூர், தேனி, பெரியகுளம், கம்பம், போடியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டு ஓதினர். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் திருவாசக மந்திரங்கள் ஓதப்பட்டது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஓதுவார்கள் பாண்டியன், மாரிச்சாமி, குருசாமி, தெய்வேந்திரன், முனியாண்டி கலந்து கொண்டு மந்திரங்களை தொடர்ந்து ஓதினர்.