பதிவு செய்த நாள்
05
ஏப்
2013
10:04
திருப்போரூர்: திருப்போரூர் கந்த சுவாமி கோவில் உண்டியல் மூலம், 35 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.திருப்போரூரில் புகழ்பெற்ற கந்த சுவாமி கோவில்உள்ளது. இக்கோவிலில் உள்ள உண்டியல்கள், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணப்படும். கடந்த ஆண்டு டிச.,12ம் தேதிக்குபிறகு, நேற்று முன்தினம் கோவிலில் உள்ள, 10உண்டியல்கள் திறக்கப்பட்டன. வேலூர் துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) வீரபத்திரன், உதவி ஆணையர் மோகன சுந்தரம், கோவில்செயல் அலுவலர் பாலகிருஷ்ணன், ஆகியோர் முன்னிலையில் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள், தன்னார்வலர்கள் என, 200 பேர் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 34.99 லட்சம்ரூபாய், 205 கிராம் தங்கம், மூன்று கிலோ 330 கிராம் வெள்ளி, ஆகியவை பக்தர்களால் செலுத்தப்பட்டிருந்தன.