மணப்பாறை: மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் 125 ஆண்டுக்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த புனித தோமையார் திருத்தலம் மலைமீது அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் பாஸ்கா விழா நடப்பது வழக்கம்.கடந்த ஒன்றாம் தேதி மதுரை பங்கு குரு மரியபிரபு திருப்பலி நிறைவேற்றி தோமையார் கொடியேற்றி பாஸ்கா விழாவை துவக்கி வைத்தார்.ஆவாரம்பட்டி பங்கு பணியாளர் ஜான்கென்னடி புளியங்குடி பங்குகுரு அருள்ராஜ், பாலக்கரை உதவி பங்குத்தந்தை ஜெரோம் ஞானபிரபு ஆகியோர் பாஸ்கா தூம்பா பவனியை துவக்கி வைத்தார். இயேசுவின் உயிர்ப்பு பாஸ்கா ரதபவனியை மணப்பாறை உதவி பங்குத்தந்தை லியோ ஜான்சன் துவக்கி வைத்தார்.கடந்த ஆறாம் தேதி இரவு தோமையார் ரதம் மலையிலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டியில் உயிர்த்த ஆண்டவர் தோமையார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.மணப்பாறை மறைவட்ட அதிபர் சகாயராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. தோமையார் பெரிய தேரை திருச்சி முதன்மை குரு தாமஸ்பால்சாமி ஆசிர்வதித்து துவக்கி வைத்தார்.விழாவில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மலையடிப்பட்டி பஞ்சாயத்து தலைவர் நாகராஜ், துணைத்தலைவர் லூக்காஸ், ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கியமேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.