பதிவு செய்த நாள்
16
ஏப்
2013
11:04
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை லட்சுமணராவ் தெரு ஞான ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை, 6 மணிக்கு வாஸ்து ஹோமம், முதல் கால யாகம், பூர்ணாஹூதியும், இரவு, 9 மணிக்கு மருந்து சாற்றுதல், தேவதாபிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு இரண்டாம் கால யாகம் நடந்தது. 9 மணிக்கு கடம் புறப்பாடு, கோபுர கலசங்கள் மற்றும் விழாவின் முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கும்பாபிஷேகத்தை ஜலகண்டாபுரம் சிவஸ்ரீ சண்முக சாஸ்திரிகள், நாகேந்திர சாஸ்திரிகள் , அம்மன் பக்தி பாடகர் வீரமணி நடராஜ் ஆகியோர் நடத்தி வைத்தனர். 12 மணிக்கு மஹா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. இதனையடுத்து பக்தர்களுக்கு அன்தானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி நகரை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அம்மன் சேவா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.