விழுப்புரம்: விழுப்புரத்தில் லட்சதீப திருவிழாவையொட்டி ஆஞ்சநேயர் சுவாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். விழுப்புரம் திரு.வி.க., வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை மாத லட்சதீப திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 11ம் தேதி எலக்ட்ரிக் சந்திரபிரபை, 12ம் தேதி கோபிகாஸ்திரிகளுடன் பின்னக்கிளை, 13ம் தேதி நாகவாகனம் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு ஏரா ளமான பெண்கள் கோவில் வளாகத்தில் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதில் மூலவர் ஆஞ்சநேயர் சுவாமி, தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் தர்ஷிணி இசைப் பயிலகம் சார்பில் இசை கச்சேரி நடந்தது.