பதிவு செய்த நாள்
20
ஏப்
2013
11:04
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில், மாசி - பங்குனி விழாவையொட்டி, கோயிலில் நிரந்தர மற்றும் தற்காலி உண்டியல்களில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், பொருட்கள் எண்ணும் பணி கோயில் வளாகத்தில் நடந்தது. உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, சரக ஆய்வாளர் முருகப்பன், செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கணக்கர் அழகுபாண்டி முன்னிலையில், பெண்கள், ஓம்சக்பள்ளி மாணவர்கள் எண்ணினர். மொத்தம் ரூ.15 லட்சத்து 88 ஆயிரத்து, 947 ரூபாய், 70 கிராம் தங்கம், 920 கிராம் வெள்ளி, 11 வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.