திருவேங்கடம்: கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீமாதா அங்காளஈஸ்வரி கோவிலில் சித்ராபௌர்ணமி அலகு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இத்திருவிழா 25ம் தேதி முடிய 5 நாட்கள் நடக்கிறது. கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீமாதா அங்காள ஈஸ்வரி கோவிலில் ராஜபாளையம் கோமரத்தார்கள் சார்பில் கொடியேற்றத்துடன் விழா ஆரம்பமானது. திருவிழா நாள்களில் தினசரி இரவு அம்மனுக்கு அபிசேக அலங்கார தீபாராதனை நள்ளிரவில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 2ம் திருநாள் அ“று வாடியூர் கோமரத்தார்கள் சார்பில் பூங்கா பிறை நடைபெற்றது. 3ம் திருநாளான இன்று செங்கோட்டை கோமரத்தார்கள் சார்பில் மாக்காபிறை நடக்கிறது. 4ம் திருநாள் அன்று கரிவலம்வந்தநல்லூர் பரம்பரை கோமரத்தார்கள் சார்பில் அலகு குடம் திருநாள் 5ம் திருநாள் அன்று இரவு பாரிவேட்டை, ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் செய்துள்ளனர்.