வேலாயுதம்பாளையம்: புன்னம் மாரியம்மன் கோவிலில் சித்திரை விழாவையொட்டி இன்று தேரோட்டம் நடக்கிறது.கரூர் மாவட்டம் புன்னம் மாரியம்மன் கோவில் சித்திரை தேர் விழா கடந்த 9ம் தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கப்பட்டது. தொடர்ந்து 16 ம் தேதி அம்மன் வீதி உலா, 19 ம் தேதியில் இருந்து, 23 ம்தேதி இரவில், அக்னி சட்டி எடுத்து கொண்டு கோவில் சுற்றி வரும் நிகழ்ச்சிகள் நடத்து வருகின்றது. மேலும், 21ம் தேதி வடிசோறு நிகழ்ச்சி, 22ம் தேதி காவிரி ஆற்றில் இருந்து புன்னம் மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து சென்றனர்.பின் கோவிலை சுற்றி பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அக்னி சட்டி எடுத்தனர். இதில் முக்கிய நிகழ்ச்சியாக , இன்று காலை 11 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது.