திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில், சித்திரை திருவிழா ஏப்.,15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி,20ம் தேதி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9 மணிக்கு துவங்கியது. பாகம்பிரியாள் தாயார், வல்மீகநாதர் சுவாமி அமர்ந்த தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 10 மணியளவில் தேர் கோயில் முன்பாக நிறுத்தபட்டது. பின்பு மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் இழுக்கபட்டு 6 மணிக்கு நிலைக்கு சென்று சேர்ந்தது. திருவெற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இரவு 9 மணிக்கு தேர்தடம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.