Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெற்றியூர் பாகம்பிரியாள் ... கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா கோலாகலம்! கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சந்திர கிரகணம்: பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஏப்
2013
10:04

புதுடில்லி: சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே, பூமி வரும் போது, சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதை, இன்று அதிகாலை, 1:37 மணிக்கு பார்க்க முடியும். இந்த பகுதி சந்திர கிரகணத்தை, ஆஸ்திரேலியா, ஆசியா (வடகிழக்கு பகுதி தவிர்த்து), ஆப்ரிக்கா, ஐரோப்பா மற்றும் அன்டார்க்டிகா கண்டங்களில் காண முடியும். இந்த ஆண்டில், மொத்தம், ஐந்து கிரகணங்கள் ஏற்பட உள்ளன. அவற்றில், மூன்று, சந்திர கிரகணம்; இரண்டு, சூரிய கிரகணம். முதல் சந்திர கிரகணம், இன்று தென்பட உள்ளது. சூரிய கிரகணத்தைப் பார்க்க, புற ஊதாக் கதிர்கள் ஊடுறுவாத, கறுப்பு கண்ணாடியை பயன்படுத்த வேண்டும்; சந்திர கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கலாம்; எந்த தீங்கும் ஏற்படாது. இன்று தென்படும் சந்திர கிரகணம், 21ம் நூற்றாண்டின், மிகக் குறுகிய, மூன்று சந்திர கிரகணங்களில், நீண்ட நேரம் தெரியும் சந்திர கிரகணம்; 27 நிமிடங்களுக்கு தெரியும். வரும், 2034, செப்டம்பர், 28ம் தேதி, 26.7 நிமிடங்களும், 2082ம் ஆண்டில், 25.5 நிமிடங்களும் சந்திர கிரகணங்கள், மிகக் குறைவான நேரத்தில் தெரியும் என, அமெரிக்காவின், "நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொலைநோக்கிகள் : சந்திர கிரகணம் குறித்து, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய இயக்குனர், அய்யம் பெருமாள் கூறியதாவது: சென்னை தவிர, திருச்சி அண்ணா அறிவியல் மையத்திலும், வேலூர் மண்டல அறிவியல் மையத்திலும், சந்திர கிரகணத்தை பார்க்க நான்கு தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும், மே 10ம் தேதியும், நவ., 30ம் தேதியும் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதுவும் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் பார்க்க முடியும். இவ்வாறு, அய்யம் பெருமாள் கூறினார்.

பரிகாரம் செய்ய வேண்டியவர்கள்: வியாழக்கிழமை பிறந்தவர்களும், திருவாதிரை, சித்திரை, சுவாதி, விசாகம், சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், தோஷம் ஏற்படும். இவர்கள் மறுநாள் காலை கோவிலில், தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். கிரகணத்துக்குப் பின், வீட்டைச் சுத்தம் செய்து, நீராட வேண்டும்.

திருப்பதியில்... சந்திர கிரகணத்தை யொட்டி, திருப்பதியில், 300 ரூபாய் சிறப்பு தரிசன நுழைவுச் சீட்டு வினியோகம், இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை தும்புரு தீர்த்த முக்கோட்டி என்பது ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் உத்திர பால்குனி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னையில் பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar