பதிவு செய்த நாள்
06
மே
2013
10:05
கழுகுமலை: கழுகுமலையில் சுமார் 80 ஆண்டு கால பாரம்பரியமாக நடைபெறும் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் சுவாமிக்கு அக்னிநட்சத்திர வெயிலை தணிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.தமிழகத்தில் புகழ்பெற்ற முருகத்தலங்களில் அறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் பிரசித்தி பெற்ற கோயில்களில் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் முருகன் ஒருமுகம், ஆறு திருக்கரங்களுடன் வேறெங்கும் காணமுடியாத இடதுபுறம் திரும்பிய மயில் மீது ராஜகோலத்தில் பொதிகை மலையை நோக்கி மேற்கு முகமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் இத்திருத்தலத்தின் சிறப்புகள் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். கழுகாசலமூர்த்தி கோயிலின் கருவறை மலைக்குன்றை குடைந்து அமைக்கப்பட்டு இருப்பதால் குடவரைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இக்கோயிலுக்கு தனியாக விமானம் இல்லாததால் மலைக்குன்றே விமானமாக அமைந்திருப்பதால் கருவறையை சுற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமெனில் மலைக் குன் றையே சுற்றி வர வேண்டும். இதனால் கழுகாசலமூர்த்தி கோயி லில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பவுர்ணமி கிரிவலம், திரு வண்ணாமலை கிரிவலத்திற்கு அடுத்தாற்போல் பக்தர்களிடையே பிரசித்தி பெற்றதாகும். மேலும் கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் தமிழகத்தின் தென்பழனி என்றும் பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறது.
கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் தினசரி, வாராந்திர, மாதாந்திர பூஜைகளும், முருகனுக்கு கொண்டா டப் படும் திருவிழாக்களும் வெகுவிமரிசையாக நடைபெறும் நிலை யில் வேறெந்த முருகத்தலங்களிலும் நடைபெறாத சிறப்பு கொண்ட கழுகாசலமூர்த்திக்கு அக்னிநட்சத்திர வெயிலை தணிக் கும் சிறப்பு பூஜைகள் கடந்த சுமார் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஏனெனில் இக்கோயில் கருவறை மலைக்குன்றை குடைந்து கருவறை அமைக்கப்பட்டு இருப்பதால் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்குமென்பதால் இச்சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இந்தாண்டு நேற்று முன்தினம் (மே.4) கோடைகால அக்னிநட்சத்திர கத்திரி வெயில் துவங்கியதையடுத்து இதற்கான சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கழுகாசலமூர்த்தி கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தள் பூஜையும், காலசந்தி பூஜையும் நடந்தது. தொடர்ந்து நண்பகலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீப மற்றும் தூப ஆராதனைகள் நடந்தது. இதையடுத்து வெள்ளி அங்கி சாத்தி சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து குமார தெப்பத்திலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு கழுகாசலமூர்த்தி கருவறையில் சுமார் இரண்டடி உயரத்திற்கு நிரப்பப்பட்டது. மேலும் அக்னிநட்சத்திரம் முடியும் நாளான வரும் 29ந்தேதி வரையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அவரை குளிர்விக்க தண்ணீர் நிரப்பப்படுகிறது. இதனால் கழுசாலமூர்த்தி வெப்பத்திலிருந்து விடுபட்டு குளிர்ந்த மனதுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்று நம்பப்படுகிறது. சிறப்பு பூஜைகளை செல்லக்கண்ணுபட்டர் செய்திருந்தார். ஏற்பாடுகளை சுமார் 80 ஆண்டுகாலமாக கழுகுமலை திருமேனிச்செட்டியார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர். சிறப்பு பூஜையில் உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி, பவுர்ணமி கிரிவலக்குழு தலைவர் முருகன் மற்றும் நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகாசி, கோவில்பட்டி, சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.