மேல்மலையனூர் அக்னி குளத்தில்தூர் வாரும் பணிகள் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2013 11:05
செஞ்சி: பலரை பலி கொண்ட மேல்மலையனூர் அக்னி குளத்தில் தூர் வாரும் பணி துவங்கி உள்ளது.ஆன்மீக தலமான மேல்மலையனூரில் சிறுதலைப்பூண்டி செல்லும் சாலையில் அக்னி குளம் உள்ளது. இதில் குளிக்கும் சில பக்தர்கள் தங்களின் துணிகளை, இதில் மூழ்க விட்டால் பாவம் தொலையும் என கருதி குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.பல ஆண்டுகளாக தூர்வாராமல் சேறுடன் இருந்த குளத்தில் துணிகளும் சேர்ந்து, ஆபத்தான பகுதியாக மாறியது. இதனால் இதில் குளித்த பல பக்தர்கள் சேற்றில் சிக்கி இறந்தனர்.இந்த குளத்தை உடனே தூர்வார வேண்டும் என தொடர்ந்து பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.தற்போது இந்த குளத்தை தூர்வருவதற்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் குளத்தில் உள்ள சேற்றையும், சகதிகளையும் பொக்லைன் மூலம் அகற்றுவதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று துவங்கியது.