Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரபாண்டி திருவிழாவில் நெரிசல் 4 ... குருபெயர்ச்சி ஆலோசனை குருபெயர்ச்சி ஆலோசனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் கோயில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் 2ம்நாள் சமய வளர்ச்சி மாநாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மே
2013
11:05

சுசீந்திரம் கோயில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் 2ம்நாள் சமய வளர்ச்சி மாநாடு சுசீந்திரம்:சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நாளை காலை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. விழாவில் 2ம்திருவிழா திருவாடுதுறை ஆதினம் சார்பில் சமய வளர்ச்சி மாநாடும், 72-வது தேவார பாடசாலை ஆண்டு விழாவும் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் நாளை காலை கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகிறது. ஒன்பதாம் நாள் விழாவில் தேரோட்டம், மறுநாள் இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. இரண்டாம் நாள் விழா முதல், தொடர்ந்து நான்கு நாட்கள் திருவாடுதுறை ஆதினம் சார்பில் தாணுமாலையன் கலையரங்கத்தில் சமய வளர்ச்சி மாநாடும், 72-வது தேவாரப்பாடசாலை ஆண்டு விழாவும் நடக்கிறது.  வரும் 10-ம் தேதி ஆரம்பமாகும் சமய வளர்ச்சி மாநாட்டிற்கு கல்யாண சுந்தர தேசிக சத்திய ஞான பரமாச்சார்ய சுவாமிகள் தலைமை வகிக்கிறார். மாலை 5-க்கு ஹரிகரன் குழுவினரின் மங்கல இசையும் , 6-க்கு தம்பையா ஓதுவாரின் திருமுறை ஓதல் இசையும் நடக்கிறது. 6.30க்கு ஆறுமுகம் வரவேற்று பேசுககிறார். மாவட்ட நீதிபதி குமரகுரு திருவிளக்கேற்றுகிறார். தொடர்ந்து அம்பலவாணத்தம்பிரான் சுவாமிகள், சுவாமி சைத்தன்யானந்த் மகராஜ், பாலபிரஜாபதி அடிகளார், மாதாஜி பரமேஸ்வரி ஆகியோர் பேசுகின்றனர். சுசீந்திரம் டவுன் பஞ்., தலைவர் முருகேஷ் பரிசு வழங்குகிறார். ராமசந்திரன் நன்றி கூறுகிறார்.  இரண்டாம் நாள் விழாவிற்கு நாராயணதாஸ் தலைமை வகிக்கிறார். சிவன்பிள்ளை வரவேற்கிறார் பட்டமுத்து,கம்பபாத சேகரன், விசுவதிலகன், ராமசாமி ஆகியோர் பேசுகின்றøர்.நான்காம் நாள் விழாவிற்கு குமரன் நாயர் தலைமை வகிக்கிறார். ராமசந்திரன் வரவேற்கிறார். கோமதி திருநாவுக்கரசு, நாராயண தந்புருஷ தேசிகர், சிவன்பிள்ளை, கந்தசாமிபிள்ளை ஆகியோர் பேசுகின்றனர்.72-வது ஆண்டு சமய வளர்ச்சி மாநாடு தேவார பாடசாலை ஆண்டு விழா , திருமடகத்தில் திருவாசகம் முற்றோதல் நிகழ்த்தும் சிவனடியார்க்கு பாராட்டு விழா, ஒன்பதாம் திருமுறை ஆய்வு விரிவுரைகள் நடக்கிறது. திருவாடுதுறை ஆதின கிளை மடம் அம்பலவானகத்தம்பிரான் விழாவை துவங்கி வைக்கிறார். ஏற்பாடுகளை சுசீந்திரம் கிளை மடம் ஆய்வாளர் ஆறுமுகம் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar