Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் கொடியேற்றம் திருநள்ளார் கோவிலில் மே 21ம் தேதி தேர் திருவிழா திருநள்ளார் கோவிலில் மே 21ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இன்று சீதா நவமி !
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 மே
2013
05:05

கௌசல்யாதேவி சித்திரை மாதத்தில் நவமி திதியில் புனர்வஸு நக்ஷத்திரத்தில் ஸ்ரீராமனைப் பெற்றாள். ராமநவமி என்று ராமஜனனத்தை விமரிசையாக விஷ்ணு கோயில்களிலும், பஜனை சங்கங்களிலும் கொண்டாடுவார்கள்.பிரம்மவாக்கின்படி, ராமர் மனிதனாக அவதரித்தார். ஸ்ரீராமரின் மனைவி சீதையை அபகரித்துச் சிறை வைத்தான் ராவணன். அதனால் அவனை ஸ்ரீராமர் அழிக்க வேண்டியிருந்தது.ராமனின் புகழ் கூறுவதால் ராமாயணம் ஆனது. ஆனால்  சரிதம் மஹத் - சீதையின் சரிதம் மகத்தானது என்பர். சீதை இல்லாவிடில் ராம அவதாரக் காரணம் முடிந்திருக்குமா!சிவ என்றால் சிவன், சிவா என்றால் தேவி. அதுபோல் ராம என்றால் ராமர். ரமா என்றால் தேவி. ஆதலால் திருமுருக கிருபானந்தவாரியார்  என்பார். சீதாநவமி என்று உண்டா? ராமநவமிக்கு அடுத்த சுக்ல நவமி சீதையின் ஜயந்தி தினம். இது என்ன புதிது? ஆம்! நம் வைணவ கோயில்களில் கொண்டாடுவதில்லை. வடநாட்டு ராமர் கோயில்களில் சீதா நவமியையும் கொண்டாடுகிறார்கள். ராம சஹஸ்ரநாமம் போன்று சீதாசஹஸ்ர நாமமும் (கீதா ப்ரஸ் பப்ளிகேஷன்ஸ்) உள்ளது. சீதா ஜயந்தி அன்று சீதை சஹஸ்ர நாமம் சொல்லி பூஜித்து தேவி அருள் பெறலாம். ஜனகரின் ஊர் ஜனக்புரி நேபாளத்தில் உள்ளது. ஜனகர் பூமாதேவியையே தனக்கு மகளாகப் பெற விரும்பினார். பக்தனின் ஆசையைப் பூர்த்தி செய்வது பகவானின் அல்லது பகவதியின் ஆவலும் அல்லவா?ஜனகர் ஒரு யாகம் செய்வதற் காக, சீதாமடி என்று பின்னாளில் அறியப்பட்ட இடத்தில் பூமி யைக் கலப்பையால் உழுதார். ஓர் இடத்தில் கலப்பை நகரவில்லை; ஏதோ தடுத்தது!  தோண்டிப் பார்த்தால் அங்கு தங்கப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை! தனது வேண்டுகோளைப் பூர்த்தி செய்தாள் அம்பாள் என்று ஜனகருக்குச் சந்தோஷம். அந்தத் தினம் சீதாநவமி. கலப்பைக்கு  என்று பெயர். சீதாமடியில் இன்றும் வெள்ளி கதவுடன் சீதாராம லக்ஷ்மணர்களுக்குச் ஒரு கோயில் உண்டு. ஜனகர் உழுது கண்டெடுத்தவாறு ஒரு பளிங்குச் சிலையும் உண்டு. தக்ஷணேஸ்வரம் பஞ்சவடியில் ஸ்ரீராமகிருஷ்ணர் சீதாராம தரிசனம் பெற, அனுமனை ஆழ்ந்து துதித்தார். அனுமார் தரிசனம் கிடைத்தது. மேலும் ஆழ்ந்து தியானம் செய்ய, சீதை தரிசனம் தந்தாள், பிறகு அவருள் ஐக்கியமானாள்.மேலும் ஆழ்ந்து தியானம் செய்ய ராமர் தரிசனம் தந்து அவருள் புகுந்தார். அத்தகைய சீதா ராமாஞ்சனேய தரிசனம் பஞ்சவடியில் பெற்றார்  ஸ்ரீராம கிருஷ்ணர். சீதா- ராம-ஆஞ்ச னேய- ராமகிருஷ்ணரை, சீதா நவமியன்றும்  ஆழ்ந்து துதித்துத் திளைப்போம்.    

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
பல்லடம்; காமநாயக்கன்பாளையத்தில், சப்த நதிகளின் தீர்த்தங்கள் வைத்து, மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar