கொடைக்கானல்:கொடைக்கானல் நாயுடுபுரம் குருசாமிபள்ளம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். மே 28ல் மின்அலங்கார பவனி, சக்தி கரகம் ஆகியவை டிப்போ காளியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு கோயிலை அடையும். மே 29ல் காலை மாவிளக்கு பூஜை, மதியம் தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. மே 30 மதியம் அன்னதானம், மாலை முளைப்பாரி கோயிலில் இருந்து புறப்பட்டு டிப்போ காளியம்மன் கோயிலை அடையும்.