யோகிகள் கங்கையை பூமியில் ஓடும் நதியாகப் பார்ப்பதில்லை. உடம்பினுள் ஓடும் நாடியாகவே கங்கையைக் கருதுவார்கள். கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளின் கூடலான திரிவேணி சங்கமமே இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று கூறுவர். யோகத்திற்கு இம்மூன்று நாடிகளே அடிப்படை.