வடலூர்: வடலூரில் நடந்த இசை விழாவில் வள்ளலார் குருகுலம் மாணவிகள் திருஅருட்பா பாடலுக்கு நாட்டியம் ஆடினர். வடலூரில் திருஅருட்பா இசை சங்கம் சார்பில் 28ம் ஆண்டு இசை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இசை சங்க செயலர் அமுதவடிவு திருவிளக்கு ஏந்தி விழாவை தொடங்கி வைத்தார். அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை நாதஸ்வரம் நடைபெற்றது. மகாமந்திரம் வழிபாடு, சன்மார்க்க உறுதி மொழி ஏற்றுதல் நடைபெற்றது. இசைச் சங்க தலைவர் சீனுவாசன் சன்மார்க்க கொடியேற்றி வைத்தார். சென்னை ரியபிரகாஷ், புதுவை ஜெகதீசன், மதுரை பத்மநாபன், திருப்பூர் சார்லஸ்குமார் அண்ணாமலை, பெங்களூரு பரமேஸ்வரி கீதாம்மாள், சென்னை சரஸ்வதி சீனுவாசன், திருவெற்றியூர் ஜீவன் குழுவினரின் இøச் கலைஞர்கள் பாடினர். இரவு வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி ஓ.பி.ஆர். நினைவு கல்வியியல் கல்லூரி மாணவிகள் திருஅருட்பா பாடலுக்கு நாட்டியம் ஆடினர். நடனமாடிய மாணவிகளை சென்னை பிரமிளா குருமூர்த்தி, ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர். தொடர்ந்து சீர்காழி சிவசிதம்பரம், ஆத்மநாதன் பாடினர்.