பதிவு செய்த நாள்
28
மே
2013
10:05
பெ.நா.பாளையம்: பூச்சியூரில் ஜலக்கண் மாரியம்மன், முத்தாலம்மன், மகாளியம்மன் கோவில்களில் திருவிழா நடந்தது. விழாவையொட்டி புற்றுக்கண் எடுத்து வருதல், வேட்டைக்கார சாமி கோவிலிருந்து அம்மனுக்கு நகை எடுத்து வருதல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. சக்தி கரகம் அழைத்தல், பொங்கல், மாவிளக்கு படைத்தல், அக்னி கரகம் ஜலகண் மாரியம்மன் கோவிலில் இருந்து மாகாளியம்மன் கோவிலுக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. நிகழ்ச்சியில், முத்தாலம்மனுக்கு மாவிளக்கு, பூச்சியூர் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராடுதல், முத்தாலம்மனுக்கு முளைப்பயிர் எடுத்தல் நிகழ்ச்சி, அப்புலுபாளையம் நாகாளம்மன் கோவிலிருந்து மாகாளியம்மனுக்கு நகை எடுத்து வருதல், சக்தி கரகம் அழைத்தல், மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், திருவிழா கமிட்டியார் செய்திருந்தனர்.