*பக்தனின் தூய உள்ளமே கடவுளின் அரியாசனம்என்று குறிப்பிடுவார் ராமகிருஷ்ணர். நம் உள்ளம் வெண்மையான ஸ்படிகம் போல தெளிவடையும் போது தான் கடவுள் அங்குகுடியேறுவார். *கிடைப்பதற்கு அரிய இளமைக்காலம் வாழ்வில் மீண்டும் வருவதில்லை. மன உறுதியுடன் செயலில் ஈடுபடுங்கள். முன்னேற்றப்பாதையில் வெற்றி நடை போடுங்கள். *சாதனை புரிய இதுவே நல்ல தருணம்! உடல் வலிமையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். மனதில் நல்லெண்ணம் மட்டும் நுழையஅனுமதி அளியுங்கள். *மனித வாழ்வின் குறிக்கோள் கடவுளைப் பற்றி அறிந்து கொள்ளுதலாகும். எல்லா வெற்றிகளுக்கும் கடவுளுடைய திருவடியில் பக்தியோடு நம்பிக்கை செலுத்துங்கள். *என் உடல், உள்ளம், உடைமை அனைத்தும் உன்னுடையதே! உனது விருப்பப்படி என்னை வழிநடத்து! என்று கடவுளிடம் அன்றாடம் பிரார்த்தனை செய்யுங்கள். *உங்களின் துன்பத்தையும், தடைகளையும் கடவுள் அகற்றி நல்வழிப் படுத்துவார். உங்கள் வாழ்வு உயர்வதற்கு கடவுளின் அருள் எப்போதும் துணைநிற்கும். *கடமையைப் புறக் கணித்து விட்டு ஆடம்பரத்திலும், சொகுசு வாழ்விலும் ஈடுபடுவது மனித மனத்தின் இயல்பு. ஆனால், இதனைத் தியானப்பயற்சி சீர்படுத்தி விடும். அதனால், தினமும் தியானத்தில் ஈடுபடுங்கள். *மனதை நல்வழிப்படுத்துவது அவசியம். முறையாகப் போராடி அதைப் பக்குவப்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். வாழ்வில் ஒழுங்கும், உறுதியும் இல்லாவிட்டால் முன்னேற்றத்தைப் பெற முடியாது. *தீவிரமாகப் பாடுபடுங்கள். தீ போல் வேலை செய்யுங்கள். எப்போதும் உஷாராக இருங்கள். ஒரு கணப்பொழுதையும் வீணாக்காதீர்கள். ஒவ்வொரு நாளும் முடிந்ததும் மாலைவேளையில் ராமகிருஷ்ணர், அம்மா! இந்த நாளும் போய்விட்டதே! இன்னும் உன் தரிசனம் கிடைக்கவில்லையே! என்று பிரார்த்திப்பது வழக்கம். *கோயில்களுக்கு அடிக்கடி சென்று வாருங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல நூல்களைப் படியுங்கள். *ஒழுக்கம் தவறாமல் வாழுங்கள். உண்மையைப் பேசுங்கள். பெண்களைத் தாயாக மதித்துப் போற்றுங்கள். இவற்றை பின்பற்றி வந்தால் வாழ்வில் பிரகாசம் தென்படத் தொடங்கும். *எந்த யோசனையும் வேண்டாம். இனியும் சோம்பி இருப்பது கூடாது. இன்றைக்கே இப்போதைக்கே நற் செயல்களில் ஈடுபடுங்கள். முன்னேறிச் செல்லுங்கள். மற்றவற்றை கடவுள் பார்த்துக் கொள்வார். *இறைவன் இருக்கிறார் என்பதில் திடமான நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் இல்லை என்று விரக்தி எண்ணத்தை ஒருபோதும் எண்ணுவது கூடாது. *எப்போதும் நல்லதை மட்டும் காணப் பழகுங்கள். நற்குணமே ஒருவரிடம் இல்லாவிட்டாலும் அவரையும் புறக்கணித்து ஒதுக்காதீர்கள். *உங்களின் ஒவ்வொரு எண்ணத்திலும், சொல்லிலும், செயலிலும் நன்மையே வெளிப்படட்டும். உங்களுக்கும், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் அமைதியும், நன்மையும் எப்போதும் உண்டாகட்டும். பிரம்மானந்தர்