நகரி: சித்தூர் மாவட்டம், நாகலாபுரத்தில் அமைந்து உள்ள திரவுபதி உடனுறை தர்மராஜா கோவிலில், ஆண்டு அக்னி வசந்த உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இம்மாதம், 24ம் தேதி வரை, 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. கோவிலில், நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது, இன்று, பாஞ்சாலி திருமண நிகழ்ச்சி, நடைபெறுகிறது. மேலும், மற்ற நிகழ்ச்சிகள் கீழ்கண்டவாறு நடைபெறும்.
நாள் நிகழ்ச்சி 17.6.2013 சுபத்திரை திருமணம் 18.6.2013 சந்திப்பு நிகழ்ச்சி 19.6.2013 அர்ஜுனன் தபசு 20.6.2013 ரத உற்சவம் 21.6.2013 உத்தர கோகிரஹணம் 22.6.2013 கிருஷ்ணன் தூது 23.6.2013 அக்னி வசந்த உற்சவம் 24.6.2013 தர்மராஜா பட்டாபிஷேகம்.