செஞ்சி:செஞ்சி பி.ஏரிக்கரை சுப்பிரமணியர் கோவிலில் 27 அடி கொடிமரம் ஸ்தாபிதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.செஞ்சி திருவண்ணாமலை ரோடு பி.ஏரிக்கரையில் உள்ள சுப்பிரமணியர் கோவிலை மார்க்கெட் கமிட்டி எடைப்பணியா ளர்கள், நெல் அரிசி, மணிலா வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் கோவிலை விரிவுபடுத்தி புதுப்பித்துள்ளனர். இதன் கும்பாபிஷேகம் வரும் 23ம் தேதி நடக்கிறது.இதை முன்னிட்டு 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 27 அடி கொடிமரம் ஸ்தாபிதம் செய்யும் நிகழ்ச்சி 12ம் தேதி நடந்தது. காலை 9 மணிக்கு விநாயகர், லட்சுமி பூஜை மற்றும் சிறப்பு ஹோமம் செய்தனர். நவரத்தின கற்கள், அர்ச்சனை செய்த இயந்திரத்தின் மீது கொடிமரம் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.இதில் திருப்பணிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.