பதிவு செய்த நாள்
28
ஜூன்
2013
10:06
கும்மிடிப்பூண்டி: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் சார்பில், கவரைப்பேட்டையில், நாளையும், மறுநாளும், காசி விஸ்வநாதர் தரிசனம் நடைபெற உள்ளது. பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ராஜயோக தியான நிலையம் சார்பில், ஒவ்வொரு முக்கிய நகரம் தோறும் காசியில் இருப்பது போன்று தத்ரூபமாக அமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் லிங்க தரிசனம் நடத்தப்பட்டு வருகிறது. கும்மிடிப்பூண்டி அடுத்த, கவரைப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ்., லட்சுமி திருமண மண்டபத்தில் நாளையும் (சனிக்கிழமை) மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) அந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை, 9:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை நடைபெறும் காசி விஸ்வநாதர் தரிசனத்துடன் ஆன்மிகம், தியானம், ஆத்மா தொடர்பான பயனுள்ள விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.