மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சேரன் நகர் 2 அதிஷ்ட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 25ம் தேதி பிள்ளையார் வழிபாடுடன் விழா துவங்கியது. 26ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. புனித தீர்த்தக் குடங்கள் கோவிலை வலம் வந்து, கோபுரத்துக்கும், மூலவருக்கும் திருக்குட நன்னீராட்டு நடந்தது. சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமி நடத்தி வைத்தார்.