*உலகம் வேண்டுவது ஒழுக்கம் மட்டுமே. உள்ளுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளியே புலப்படுத்துங்கள். கொழுந்து விட்டெரியும் அன்பு உள்ளத்தோடு தன்னமில்லாமல் பிறருக்கு தொண்டாற்றுங்கள். *உலகம் முழுதும் எதிர்த்து நின்றாலும், மனதிற்குச் சரியென பட்டதைச் செய்யும் துணிவு வேண்டும். எடுத்துக் கொண்ட குறிக்கோளை விடாமல் பின்தொடர்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம். *உடலிலும் மனதிலும் உள்ள குறைபாடுகளை நினைத்து துயரப்படுவதால் பயன் விளையாது. அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல்ஊக்கமுடன் செய்யும்வீரமுயற்சியே மேல்நோக்கி செலுத்தும். *யாருடைய மனம் ஏழை எளியவர்க்கு துயரத்தில் ஆழ்ந்து விடுமோ, அவரே மகாத்மா. *எல்லா உயிர்களும் இறைவன் வாழும் கோயில் என்றாலும் மனிதனே அனைத்திலும் உயர்ந்த கோயில். அதைவழிபட இயலாதவன் வேறு கோயிலுக்கு செல்வதால்பயனில்லை. *உண்மையை பேசுங்கள். எத்தனை தவறான தூண்டுதல் குறுக்கிட்டாலும் உண்மைக்கே பணிவிடை செய்யுங்கள்.அதனால், தெய்வீக வலிமை பெறுவீர்கள். *பணியை ஒழுங்காகவும், அமைதியுடனும் செய்யப் பழகுங்கள். வெறும் புகழ் வேண்டியும், பகட்டுவாழ்வுக்காகவும் செய்வது கூடாது. *ஒன்றாகக் கூடி வாழ்வதே வலிமை. பிறருக்கு நன்மை செய்வதே வாழ்வின் நோக்கம். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள்ளுங்கள். கட்டளையிடும் தகுதி தானாகவே கிடைக்கும். *பூமி அன்னையைப் போல பொறுமையைக் கடைபிடிக்கத் தயாரானால், உலகமே உங்கள் காலடியில் கிடக்கும். *நம்பிக்கை, நேர்மை, பக்தி உள்ளத்தில் இருக்குமானால், எல்லாவகையிலும் முன்னேற்றமே. பகைவனிடம் கூட அன்பு காட்டத் தவறாதீர்கள். யாரையும் ஏளனமாக நினைக்காதீர்கள். *பிறருக்காகச் செய்யும்சிறுமுயற்சி கூட பெரும் சக்தியை உண்டாக்கும். பிறருக்கு மனதால் நன்மையை நினைத்தால் கூட சிங்கத்தின் பலம் நமக்கு வரும். *உறங்குவதற்கான காலகட்டம் இதுவல்ல. அனைவரும் பாடுபடத் தயாராவோம். வெற்றியைப் பறிக்க களத்தில் இறங்குவோம். எதிர்காலம் நம் முயற்சியைப் பொறுத்தே அமையும். *பிறர் எவ்வளவு மோசமானவராக இருந்தாலும், அவரது குற்றங்களைப் பற்றி ஒருபோதும் பேசுவது கூடாது. குறை கூறுவதால் அவருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் கேடு உண்டாக்கிக் கொள்கிறோம். *உலகத்திலே எப்போதும் கொடுப்பவராகவே இருங்கள். பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்த்து காத்து நிற்காதீர்கள். இறைவனைப் போல நாமும் ஈகைகுணத்தோடு இருப்போம். *காற்றுள்ள போதேதூற்றிக்கொள் என்பார்கள். சோம்பல் நமக்கு சிறிதும்உதவாது. ஆர்வத்துடன் தொழில்களத்தில் இறங்குங்கள். *உயிருக்கு நிகரான இந்த தேசம் வீரர்களுக்கு மட்டுமே உரியது. வெற்றியோ, தோல்வியோ விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளுங்கள். தோல்வியைக் கண்டுதுவளாதீர்கள். *எப்போதும் முகத்தில் மலர்ச்சியும், இதழில் புன்னகையும் இருப்பவன் கடவுளின் அருகில் செல்லும் தகுதியைப் பெறுகிறான். -விவேகானந்தர்