பதிவு செய்த நாள்
10
ஜூலை
2013
11:07
திருக்கழுக்குன்றம்: புல்லேரி ஊராட்சியில் உள்ள, பழமையான அம்மன் கோவில் குளம், பராமரிப்பின்றி சீரழிந்து வருவதால், தூர்வாரி சீரமைக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சரிவர பராமரிக்காததால் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்டுள்ளது புல்லேரி ஊராட்சி. இங்குள்ள பெரியார் நகரில், செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையோரம், முத்துமாரியம்மன் கோவில் குளம், 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள இக்குளத்தை, ஊராட்சி நிர்வாகத்தினர் சரிவர பராமரிக்காததால், கரைகள் சரிந்து, தூர்ந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். முற்றிலும் தூர்ந்து போகும் இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், குளிப்பதற்கு தண்ணீர் இன்றி, அவதிப்படுகின்றனர். இதே நிலை நீடித்தால், குளம் முற்றிலும் தூர்ந்து போகும் நிலை உள்ளது. எனவே, இதை தூர்வாரி, சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், "கோவில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள், பாதசாரிகள் மற்றும் கிராம மக்கள் என, அனைவருக்கும் பயனளித்து வந்த இக்குளம், தற்போது, தூர்ந்து வருகிறது. இதை சீரமைக்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.