திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் பிரார்த்தனை மற்றும் திருப்பணி உண்டியல்கள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. இதில் 9 லட்சத்து 98 ஆயிரத்து 460 ரூபாய், தங்கம் 174 கிராம், வெள்ளி 245 கிராம் இருந்தன. மொத்த மதிப்பு 14 லட்ச ரூபாய். காணிக்கை எண்ணிக்கையை அறநிலையத்துறை உதவி கமிஷனர் சுந்தரமூர்த்தி, மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் மாரிமுத்து, ஆய்வாளர் லட்சுமிமாலா மேற்பார்வையிட்டனர்.