பதிவு செய்த நாள்
11
ஜூலை
2013
10:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் துணை கோயிலான செல்லூர் திருவாப்பனூர் கோயிலில் கும்பாபிஷேகம் ஜூலை 14ல் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று துவங்கின. இக்கோயிலில் திருப்பணிகள் முடிந்துள்ளன. யாகசாலையில் 10 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமி சன்னதியில் நேற்று யாகபூஜைகள் துவங்கியது. சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓதி பூஜைகளை நடத்தினர். செந்தில்பட்டர் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட பசு, யானையை நிறுத்தி பூஜைகள் நடந்தன. அனுக்ஞை, மகாகணபதி ஹோமம், தனபூஜை, நவக்கிரக ஹோமம் என, பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கின. இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் தனபால், இணை கமிஷனர்கள் ஜெயராமன், முத்துதியாகராஜன், பேஷ்கார் பகவதி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். மாலையில் வாஸ்துசாந்தி, பிரவேசபலி, ரதோக்னஹோம பூஜைகள் நடந்தன. இன்றும்(ஜூலை 11) விக்னேஸ்வர பூஜை, மூர்த்திஹோமம் போன்ற பூஜைகள் நடத்தப்படும். ஜூலை 14 காலை 9.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 10 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கும்.