அங்காள பரமேஸ்வரி கோவிலில் 4ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூலை 2013 10:07
புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், வரும் 4ம் தேதி ஏகதின லட்சார்ச்சனை நடக்கிறது. அங்காள பரமேஸ்வரி கோவிலில் 32ம் ஆண்டு ஏக தின லட்சார்ச்சனை வரும் 4ம் தேதி காலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. காலை 6:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைபல பிரிவுகளாக லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனையில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், முன்னதாக தேவஸ்தானத்தில் ரூ.250 செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளவேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பூஜையில் கலந்து கொள்ள இயலாதவர்கள், நேரில் 2 நாட்களுக்குள் கோவிலுக்கு வந்து பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம் என கோவில் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர். லட்சார்ச்சனை ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன், அர்ச்சகர் பாலசுப்பிரமணிய குருக்கள் செய்து வருகின்றனர்.