கொழுந்துமாமலை முருகன் கோயிலில் கடைசி வெள்ளி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2013 10:07
தென்காசி: சேரன்மகாதேவி கொழுந்துமாமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (12ம் தேதி) கடைசி வெள்ளி சிறப்பு பூஜை நடக்கிறது. சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அடிவாரத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத கடைசி வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இதன்படி ஆனி மாத கடைசி வெள்ளியான இன்று (12ம்தேதி) மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். சேரன்மகாதேவி பஸ் ஸ்டாண்டிலிருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.