பதிவு செய்த நாள்
12
ஜூலை
2013
10:07
ஆழ்வார்குறிச்சி: திருமலையப்பபுரம் சிவனணைந்தபெருமாள் கோயிலில் வரும் 14ம்தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. திருமலையப்பபுரத்தில் யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சிவனணைந்தபெருமாள் கோயிலில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்று (12ம் தேதி) காலை 5 மணி முதல் மகா கணபதி ஹோமம், புண்ணியாகம், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், கோபூஜை, கஜபூஜை, பிரம்மசாரி பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியனவும், மாலை 4 மணி முதல் தீர்த்தம் அழைத்து வருதல், குடி அழைப்பு, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, காப்பு கட்டு, கலா கர்ஷணம், 1ம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. நாளை (13ம் தேதி) காலை 8 மணி முதல் 2ம் கால யாகசாலை பூஜை, ஸ்ரீ ருத்ரம் ஜெயம், ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, மாலை 4 மணியிலிருந்து 5 மணிக்குள் சயபானதி வாசகம், மாலை 6 மணி முதல் 3ம் கால யாகசாலை பூஜை, திருமுறை பாராயணம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை, இரவு 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது.
கும்பாபிஷேக நாளான வரும் 14ம்தேதி காலை 7 மணி முதல் 4ம் கால யாகசாலை பூஜை, மூலமந்திர ஹோமம், ஸ்பர்ஸாகுதி, திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்படுதலும் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் செல்வ விநாயகர், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. 15ம்தேதி முதல் ஆக.25ம்தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. அதனை தொடர்ந்து வரும் ஆக.30ம்தேதி கால் நாட்டுதல் வைபவம், வரும் செப்.5ம்தேதி முதல் 7ம் தேதி முடிய கொடை விழாவும் நடக்கிறது.ஏற்பாடுகளை திருமலையப்பபுரம் யாதவ சமுதாயத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.