வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலையில் கருடக்கொடிக்கு, யாகபூஜையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சேவா சமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், தலைவர் ராஜகோபாலன் தலைமையில் வீதியுலா நடந்தது. கோயிலை வலம் வந்தபின், கொடியேற்றம் நடந்தது. நிர்வாக அதிகாரி சரவணன் கொடியேற்றினார். சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் விழா, ஏழு நாட்கள் நடைபெறுகிறது. தினம் சுவாமி,வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார்.