நத்தம்; நத்தம் அசோக் நகர் பகவதியம்மன் கோவிலில் மார்கழி மாத 2வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் அசோக்நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் விளக்கு பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.