பதிவு செய்த நாள்
19
ஜூலை
2013
10:07
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பட்டத்தரசியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பால் அபிஷேக விழா இன்று நடக்கிறது. பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டியில் அமைந்துள்ளது பட்டத்தரசியம்மன் கோவில். இக்கோவிலில் இன்று (19ம் தேதி) 19ம் ஆண்டு ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவிலில் இருந்து சக்தி கும்பம் உருவெடுத்து முக்கிய வீதிகள் வழியாக உலா வருகிறது.காலை 11.00 மணிக்கு பட்டத்தரிசி அம்மனுக்கு பால் அபிஷேகம் நடக்கிறது என இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
* பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு கோமாதா பூஜையும், மாலை 5.15 மணிக்கு மகாலட்சுமி பூஜை நடக்கின்றன. பக்தர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என கோவில்
நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.\
* கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், இன்று ஆடி வெள்ளியை
முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. ஆடிவெள்ளியை ஒட்டி, கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன், கரியகாளியம்மன், மாமாங்கம் பத்ரகாளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம் போன்றவைகளால் அபிஷேக பூஜைகள் செய்து, சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெறவுள்ளன.கிணத்துக்கடவு அடுத்துள்ள சூலக்கல்லில் உள்ள விநாயகர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.