பதிவு செய்த நாள்
22
ஜூலை
2013
10:07
குன்னியூர்: கருப்பராய சுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவ விழா வரும் 24ம் தேதி நடக்கிறது. அன்னூருக்கும், சிறுமுகைக்கும் இடையில், குன்னியூர்-கைகாட்டியில் பழமையான கருப்பராய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, 23ம் தேதி செவ்வாய் இரவு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறது. கங்கணம் கட்டுதல், ஜமாப் நிகழ்ச்சி நடக்கிறது. 24ம் தேதி காலையில் பால் அபிஷேகம், பொங்கல் வைத்தல், கரகம் எடுத்தல் நடக்கிறது. மதியம் அலங்கார பூஜை, கிடாய் வெட்டுதலும், இரவு கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. 26ம் தேதி, மதியம் மறுபூஜையும், மாலையில் திருவிளக்கு வழிபாடும், இரவு கஞ்சி கலயம் எடுத்தலும் நடக்கிறது.