க.பரமத்தி: குப்பம்பாளையம் மலையாள கருப்பண்ண ஸ்வாமி கோவில் பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடந்தது.கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில், 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மலையாள கருப்பண்ண ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, பத்தாம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.கடந்த, 25ம் தேதி கருப்பண்ண ஸ்வாமி திருவிழா உலா, 26ம் தேதி குடிபாட்டு மக்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், 27ம் தேதி மாலை தீர்த்தம் ஆகிய சிறப்பு பூஜைகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பொங்கல் வைத்து, கிடா வெட்டி நேர்த்தி கடன் செலுத்தி ஸ்வாமி வழிபாடு நடத்தினர்.திருவிழா ஏற்பாடுகளை, குப்பம்பாளையம் ஊர்ப்பொதுமக்கள் மற்றும் குடிபாட்டுகாரர்கள் செய்திருந்தனர்.