நான்குநேரி: நான்குநேரி அருகேயுள்ள ஏமன்குளம் பொத்தையடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் விளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், மதியம் அன்னதானம் நடந்தது. மாலையில் நடந்த விளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தக்கார் பரமசிவம், முன்னாள் அறங்காவலர் ராஜமுத்து, கலையரசன் செய்திருந்தனர்.