வேப்பங்காடு புனித அன்னம்மாள் ஆலய திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூலை 2013 10:07
மெஞ்ஞானபுரம்: ஜூலை.26-மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காடு புனித அன்னம்மாள் ஆலய வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மெஞ்ஞானபுரம் அருகே வேப்பங்காட்டில் புகழ் பெற்ற புனித அன்னம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பக்தியுடன் இங்குள்ள புனித அன்னம்மாளை வழிபட்டு வந்தால் குடும்பப் பிரச்னை, திருமணத்தடை, குழந்தையின்மை, குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும் என அப்பகுதி மக்கள் மிகுந்த நம்பக்கையுடன் கூறுகின்றனர். இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை இலங்கநாதபுரம் பங்குத் தந்தை நெல்சன் பால்ராஜ் அடிகளார் கொடியேற்றித் துவக்கி வைத்தார். பத்து நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பலி நடக்கிறது. திருவிழாவின் ஒருபகுதியாக ஆகஸ்ட் 2ம்தேதி எட்டாம் திருவிழா அன்று புனித அன்னாள் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் ஆண்டுவிழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மறுநாள் ஒன்பதாம் திருவிழா அன்று மாலை சிறப்பு மாலை ஆராதனையும் இரவு புனித அன்னம்மாளின் சொரூப சப்பரப்பவனியும் நடக்கிறது. 3ம் தேதி பத்தாம் திருவிழா அன்றுகாலை திருவிழாவின் சிறப்பு திருப்பலி நடை பெறும் இதில் சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைக்குரு எட்வர்ட் அடிகளார், மற்றும் வள்ளியூர் பாதிரியார் அருள்சகாயம் அடிகளார் ஆகியோர் பங்கேற்று மறைக்கல்வி பயின்ற சிறுவர் சிறுமியர்களுக்கு புது நன்மை அருட்சாதனம் வழங்கப்படுகிறது. மாலையில் மீண்டும் புனித அன்னம்மாளின் சொரூப சப்பர பவனி நடக்கிறது. மறுநாள் ஆகஸ்ட் 5ம்தேதி மாலை ஆலயத்தில் அசன விழா நடக்கிறது.