திருத்துறைப்பூண்டி: ஸ்ரீ ராதா கல்யாண வைபவ உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.திருத்துறைப்பூண்டி மங்கை மஹாலில் ஸ்ரீ ராதா கல்யாண வைபவ உற்சவம் வெகுவிமரிசையாக கடந்த, இரண்டு நாட்களாக நடந்தது. முன்னதாக ராமர் கோவிலிருந்து, நேற்று முன்தினம் ராதா கல்யாண பஜனை சம்பிரதாயப்படி நடந்தது. நேற்று முன்தினம் காலை அஷ்டபதி துவங்கி, மாலை ராமர் கோவிலிருந்து ஸ்வாமி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், சீர்வரிசைகளுடன் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தது.அப்போது நாம ஸ்ங்கீர்த்தனம் செய்தபடி பக்தர்கள் வந்தனர். இரவில் திவ்ய நாம பஜனை மற்றும் அபிநய நடன நிகழ்ச்சி நடந்தது. நேற்றுக்காலை உஞ்சிவிருத்தி, மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம், ஸ்ரீ ராதா கல்யாண திருமாங்கல்ய தாரண நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. இதை பிரம்மஸ்தி கோபால சுந்தரம் பாகவதர் தலைமை வகித்து நடத்தி வைத்தார். இதற்கான, ஏற்பாட்டை ஸ்ரீ பாண்டுரங்க பஜன் மண்டலி சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.