தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு திருப்பலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2013 10:07
தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவில் நேற்று புதுநன்மை நற்கருணைப்பவனி நடந்தது. விழாவில் இன்று மாலை மாற்றுதிறனுடையாருக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது.உலக அளவில் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, மற்றும் செபமாலை நடந்துவருகிறது. விழாவில் நேற்று காலை புதுநன்மைத் திருப்பலி ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடந்தது. இதில்ஏராளாமான சிறுவர்,சிறுமியர் மற்றும் அமலோற்பவ மாதா ஆண்கள் சபையினர், தூய வின்சென்ட் தே பவுல் சபையினர், கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து ஆங்கிலத்திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஸ்டேட்பாங்க் காலனி இறைமக்களுக்கான திருப்பலியும, மலையாள திருப்பலியும் நடந்தது. மாலையில் செபமாலை, நற்கருணைபவனி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடந்தது.விழாவில் இன்று காலை 6.30 இனிகோ நகர் பங்கு இறைமக்கள் , தூய சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள் திருச்சிலுவை மழலையர் தொடக்கப்பள்ளி மற்றும் மனையியில் கல்லூரி மாணவிகள் ஆசிரியர்கள் புனிதசார்லஸ் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ளும் திருப்பலியும் நடக்கும்,11 மணிக்கு நகர செபக்குழுக்களுக்கான சிறப்புத்திருப்பலியும் அதைத்தொடர்ந்து மாலை 5. 30மணிக்கு மாற்றுதிறனுடையோருக்கான சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. வரும் 5ம் தேதி தேதி தங்கத்தேரோட்டம் நடப்பதால் தேரோட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்துவருகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் துணை பங்குதந்தை மற்றும் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.