Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளபரமேஸ்வரி கோவிலில் வழிபாடு ராமேஸ்வரத்தில் ஆடித் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயில் கொடை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
10:07

ஆரல்வாய்மொழி: முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயிலில் பூக்குழி கொடைவிழா நடந்தது. முப்பந்தல் ஆலமூடு அம்மன் கோயில் கொடை விழா கடந்த 29ம்தேதி துவங்கியது. அன்று காலை 5க்கு கணபதிஹோமம், மதியம் தீபாராதனை, மாலை வில்லிசை, யானைகளுடன் கஜபூஜை, தொடர்ந்து, திருவிளக்கு பூஜை, தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், செவ்வந்தி பச்சைமால் திருவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார். நேற்று (30ம்தேதி) காலை 5க்கு ஆரல்வாய்மொழி திருவாவடுதுறை ஆதினத்திற்கு உட்பட்ட அகலிகை ஊற்றில் அபிஷேக குடங்கள் நிறைத்தல், அகலிகை ஊற்று பிள்ளையார் கோயிலில் இருந்து அபிஷேக குடங்கள், முளை பாத்தி காவடி, வேல்குத்து, பறவை காவடி, சூர்யகாவடியுடன் பாத யாத்திரையாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பஜனை பாடி ஆரல்வாய்மொழி வடக்கூர் மீனாட்சி அம்மன் கோயில் வழியாக தாணுமாலயன் புதூர் வழியாக ஆலமூடு அம்மன் கோயில் வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில வர்த்தக துணைத்தலைவர் ஜெயசந்திரன் தலைமை வகித்தார். நாகர்கோவில் நகராட்சி சேர்மன் மீனாதேவ், கோட்ட பொறுப்பாளர் வேல்பாண்டி, மாவட்ட பொதுசெயலாளர் சொக்கலிங்கம், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் தேவ், முன்னிலை வகித்தனர். பா.ஜ., பிரமுகர் காந்தி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். காலை 11க்கு அன்னதானம், தொடர்ந்து, பாயாசகுளியல், அபிஷேகம், உச்சகால தீபாராதனை, அக்னி கலசம் எடுத்தல், தேர்பவனி, பூக்குழி பூஜை, அக்னி வளர்த்தல், வில்லிசை, பூப்படைப்பு, பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அம்மன் சுவாமிகளுக்கு ஊட்டு படைத்தல், பிரசாதம் வழங்கல் நடந்தது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட பஞ்., கவுன்சிலர் தாணுபிள்ளை, இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் நவமணி, ஆரல்., கவுன்சிலர் துணை செல்வன், கன்னியாகுமரி சட்டசபை தொகுதி இணை செயலாளர் மணி, தி.மு.க., மகளிரணி சுந்தரி, தொழிலதிபர்கள் விசு, வடிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர். இன்று காலை 9க்கு நையாண்டி மேளம், தொடர்ந்து, வில்லிசை, பொங்கல் வழிபாடு, தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், பிரசாதம் வழங்குதல், திருஷ்டிபூஜை, நடை சாத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இவ்விழாவையொட்டி ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் ராஜேஷ், எஸ்.ஐ., அனிதா, தனிப்பிரிவு ஏட்டு பகவதியப்பன், நெடுஞ்சாலைத்துறை போக்குவரத்துவரத்து போலீசார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இவ்விழா ஏற்பாடுகளை முப்பந்தல் ஆலமூடு அம்மன் சாரிட்டபிள் டிரஸ்ட் தலைவர் அருணாச்சலம் மற்றும் நிர்வாகக் குழுவினர், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar