ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருவிழா இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர். ஆகஸ்ட் 6ம் தேதி ஆடிஅமாவாசை தினத்தை முன்னிட்டு ஆடித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டு வருவதாக ஆலய துணை கமிஷ்னர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.