வங்காளத்தில் ராமாயணத்தை எழுதியவர் கிருத்திவாசர். இவர் மூலக்கதை ராமாயணத்தில் பலவித மாற்றங்களைச் செய்து, தனது கதையை அமைத்திருக்கிறார். பஞ்சமுக ஆஞ்சநேயர், மயில் ராவணனை சம்ஹாரம் செய்தது பற்றி விரிவாக அதில் கூறியுள்ளார். குகன் ராமரிடம், ராமா! இப்பூலோகத்தில் மீண்டும் கிருஷ்ணராக அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவாயாக என வேண்டுவதாகக் கூறுகிறார். ராமசீதா திருமணத்தைச் சொல்லும் போது சிவபார்வதியே சீதா ராமராக வந்ததாக இவர் குறிப்பிடுகிறார்.