பதிவு செய்த நாள்
12
ஆக
2013
10:08
கீழக்கரை:""ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா செப்., 7ல் துவங்குகிறது என தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் அம்சத் ஹூசைன் கூறினார்.அவர் கூறியதாவது;ஏர்வாடி அல்குத்புல் அக்தாப் சுல்த்தான் செய்யது இப்றாஹீம் ஷஹீதுவலியுல்லா தர்கா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. 839ம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், சந்தனக்கூடு திருவிழா செப்., 7ல் துவங்க முடிவு செய்யப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.செப்., 16ல் அடிமரம், 17ல் கொடியேற்றம், 29ல் சந்தனக்கூடு, அக்.,6ல் கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது,என்றார்