விழுப்புரம்:கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரயில்வே காலனியில் உள்ள வைரமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் வடக்கு ரயில்வே காலனியில் உள்ள வைரமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்துது. இதில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா கடந்த 9ம்தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் துவங்கியது. பின், பகல் 12:00 மணிக்கு கரகம் ஜோடித்து செடல் போட்டு, வீதியுலா வந்த பக்தர்கள் தீக்குழியில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.மாலை 6:00 மணிக்கு கும்ப படையல் இடுதல் நிகழ்ச்சி, சிறப்பு தீபாராதனை நடந்தது. வைரமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை ஆலய குழுவினர், இளைஞரணி மற்றும் வடக்கு ரயில்வே காலனி பொது மக்கள் செய்திருந்தனர்.