அவலூர்பேட்டை:மேல்மலையனூர் மீனவ மக்கள் தாயனூரில் ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.ஆடி மாதத்தில் வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஆதியை மறக்காத மீனவர்கள், தாயனூரில் ஊரணி பொங்கல் வைப்பது வழக்கம். இதன்படி மேல்மலையனூரைச் சேர்ந்த பருவத ராஜகுல மக்கள் (மீனவர்கள்) நேற்று தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் ஊரணி பொங்கல் வைத்து, வழிபட்டனர்.முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.