பதிவு செய்த நாள்
16
ஆக
2013
10:08
அரியலூர்: ஆடி கடை வெள்ளியை முன்னிட்டு, அரியலூர் ஆஸ்பத்திரி தெரு, ஸ்ரீவீரமா காளியம்மன் கோவில் பால்குட உற்சவம் நடக்கிறது. அதையொட்டி இன்று காலை 10 மணிக்கு, அரியலூர் செட்டி ஏரிக்கரையிலிருந்து பக்தர்களின் பால்குடம் மற்றும் அலகு காவடி ஊர்வலம் துவங்கி, மதியம் 12 மணியளவில் கோயில் வளாகத்தை சென்றடைகிறது. தொடர்ந்து ஸ்ரீவீரமா காளியம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணியளவில், கேவிலில் துவங்கி, காளியம்மன் கோவில் தெரு, ஆஸ்பத்திரி தெரு, ரயில்வேகேட், பென்னி ஹவுஸ் தெரு, கடைவீதி, முதலியார் சத்திரம் தெரு, சுப்ரமணியர் கோயில் தெரு வழியாக அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் ஊரணி பொங்கல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான ஓய்வு பெற்ற கூட்டுறவு சங்க செயலாளர் சுப்ரமணியன், வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், அழகிரி, கணேசன், கிருஷ்ணமூர்த்தி, கிரி உள்ட்டோர் செய்து வருகின்றனர்.