Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சூரியனின் முதல் கோயில் காசு மழை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விஷ்ணுவின் ஐந்து நிலைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
03:08

விஷ்ணு பகவான் ஐந்து நிலைகளில் அவதாரம் செய்கிறார். பரம் : பரம் என்ற நிலையானது வைகுந்தத்தில் ஸ்ரீமந் நாராயணன் பூமிதேவி, நீளாதேவி உடன் அலங்கார ரூபனாய் கருடன், அநந்தர், விஸ்வக்÷க்ஷனர் முதலியோரால் சூழப்பட்டு இருக்கும் நிலை. சுத்த சத்துவமான ஞான, திவ்ய மங்கள வாசுதேவர் வடிவம் இது.

வ்யூகம் : வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், ஷங்கர்ஷணன் ஆகிய நான்கு வடிவங்களாக அவதரித்த நிலை. உலகத்தைப் படைக்க, காக்க, அழிக்க, தியானிக்க, பூஜை செய்யப்படவுமானவை இவை.

விபவம்: இது பகவான் எடுத்த அவதாரங்களைக் குறிப்பது. தன்வந்திரி, ஹயக்ரீவர், மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், இப்படிப் பல அவதாரங்களை உலகில் ஒவ்வொரு சமயத்திற்கும் ஏற்ப ஒவ்வொரு வடிவில் அவதரித்தது. தருமத்தைக் காப்பாற்றவும், நல்லோர்க்கு அருளவும், தீயோரை தண்டிக்கவுமே அவதாரங்கள் நிகழ்த்தப்படுகின்றன.

அந்தர்யாமி : பரமாத்மாவாக எல்லா ஜீவராசிகளுக்கு உள்ளேயும் உறைபவராகவும், ஜீவாத்மாவாக உடலினுள் உயிர்போல இதயத்துள் வாழ்பவராயும், ஜீவனின் குற்றங்கள், குறைகளால் பாதிக்கப்படாதவராயும் இருக்கின்ற நிலை.

அர்ச்சாரூபம் : நாம் கோயில்களில் வணங்கும் கல், பொன், செம்பு, ஐம்பொன், மரம், சுதை போன்றவற்றால் செய்யப்பட்ட பலப்பல விக்ரஹங்களாக, அடையாள மூர்த்தங்களாய் இருப்பது. கோயிலில்வணங்கப்படும் இந்த சில வடிவங்களில், முழுமையாக கடவுள் வாசம் செய்கிறார். அர்ச்சாவதாரத்தில்தான் கடவுளின் தன்மை முழுமை அடைகிறது. எனவே ஆலயம் சென்று வழிபடுவது ஆண்டவனையே தரிசித்துப் பார்ப்பதற்குச் சமம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar